அமெரிக்க நிறுவனமான பைசர் உடன் தடுப்பூசி உருவாக்கும் நிறுவனமான பயோ டெக் இன் தலைமை நிர்வாகி உகர் சாஹின் இன்னும் 10 ஆண்டுகளுக்கு கொரோனா முடிவடையாது என்று கூறியுள்ளார்.
கொரோனா மற்றும் புதிய வைரஸ் போன்றவை பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இது முன்பிருந்ததை விட மிகவும் ஆபத்தானது என கூறப்படுகிறது. இந்த ஆபத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து நாட்டு மக்களும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் எனவும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு அறிவித்துள்ளது. உலகநாடுகளின் பல கொரோனா பற்றி எச்சரிக்கை ஆகிவிட்டது.
இந்நிலையில் தடுப்பூசிகளை உருவாக்கும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கொரோனா வைரஸ் இன்னும் 10 ஆண்டுகளுக்கு முடிவடையாது என்று கூறியுள்ளார். பிரிட்டனில் காணப்படும் புதிய வைரஸ் நோய்க்கு ஏற்ப தடுப்பூசி தயாரிப்பது என்பது மிகப்பெரிய விஷயம். 6 வாரங்களில் வைரஸ் மாற்றங்களை ஏற்ப தடுப்பூசியை மாற்றலாம். மேலும் பைசர் தடுப்பூசி 45 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் காணப்படும் புதிய வகை கொரோனா பழைய கொரோனவை விட 70% அதிகப்படியான தொற்று ஏற்பட்டு ஏற்படுத்தும். ஆஸ்திரேலியா, இத்தாலி, நெதர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிரிட்டனில் இருந்து திரும்பி வந்தவர்கள் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பின்னரே புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்தில் ஆய்வுக்கு ஒரு தயாரிப்பு உள்ளது எனவே விரைவில் இதற்கான தடுப்பு மருந்து முழு அளவில் கிடைக்கும் என கூறினார்.