கடந்த வாரம் பெண் ஊழியர் ஒருமித்த உறவு வைத்துக்கொண்ட ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக், வால்மார்ட் நிறுவனத்தில் வகித்து வந்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய துரித உணவுச் சங்கிலி நிறுவனமான மெக்டொனால்ட் கார்ப், கடந்த வாரம் அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக்கை பதவி நீக்கம் செய்தது. அதற்கு பெண் ஊழியர் உடன் ஒருமித்த உறவு வைத்துக்கொண்டதே, ஸ்டீவின் இந்தப் பதவி நீக்கத்துக்குக் காரணம் என அந்நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், ஸ்டீவ் முன்பே பதவி வகித்துக்கொண்டிருந்த வால்மார்ட் நிறுவனக்குழுவில் இருந்தும் விலகியுள்ளார் ஸ்டீவ்.

கடந்த 2018ஆம் ஆண்டு, ஈஸ்டர்ப்ரூக் வால்மார்ட்டின் குழுவில் இணைந்தார். இதுவரை இழப்பீடு மற்றும் மேலாண்மை மேம்பாடு, மூலோபாய திட்டமிடல் மற்றும் நிதிக் குழுக்களின் ஒரு பகுதியை கண்காணித்து வந்த ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக் அவர் பதவியில் இருந்து விலகியுள்ளார் என அந்நிறுவனம் இன்று அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.