Categories
மாநில செய்திகள்

வடசென்னையில் தொற்று பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – முதல்வர் பழனிசாமி!

வடசென்னையில் தொற்று பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது என்றும் தமிழகத்தில் கொரோனாவுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படுவதால் இறப்பு விகிதம் குறைவு என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் சென்னையில்தான் அதிகளவில் கொரோனா தொற்று உள்ளது. சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் பாதிப்பும் அதிகமாக உள்ளது. சென்னையில் மட்டும் தினமும் 4,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

வடசென்னையில் தொற்று பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முதலமைச்சர் கூறியுள்ளார். இந்தியாவிலேயே அதிகம் பேர் குணமடைவது தமிழகத்தில் தான், மருத்துவர்கள், செவிலியர்களின் பணியால் 56% பேர் குணடமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என முதல்வர் தெரிவித்துள்ளார். அறிகுறி தென்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு மக்கள் தெரிவிக்க வேண்டும்.

வீட்டை விட்டு வெளியே செல்லும் போது பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சென்னை மாநகராட்சி மூலமாக 1.5 கோடி முக கவசங்கள் வாங்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம், கொரோனாவை ஒழிக்க அரசு கூறும் அறிவுரைகளை பின்பற்றி மக்கள் செயல்பட்டால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

Categories

Tech |