Categories
சினிமா தமிழ் சினிமா

உங்க படம் என்கிட்ட இருக்கு…. தயாரிப்பாளரை கோபப்படுத்திய நபர்…. வைரலாகும் ட்விட்டர் பதிவு….!!!

சுல்தான் திரைப்படம் என்னுடைய டெலிகிராம் சேனலில் இருக்கிறது என்று நபர் ஒருவர் தயாரிப்பாளரை கோபப்படுத்தி உள்ளார்.

ட்ரீம் வாரியர் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள படம் சுல்தான். பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்திக் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபுவின் சமூகவலைத்தள பக்கத்தில் நபர் ஒருவர் சுல்தான் படம் தற்போது என்னுடைய டெலிகிராம் சேனலில் இருக்கிறது என்று பதிவு செய்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த எஸ்.ஆர்.பிரபு, “அடேய், என் கமெண்ட்ல வந்து என் படத்துக்கே பைரசி புரமோட் பண்ற அளவுக்கு வந்துட்டீங்களா. இதோ வரண்டா என்று பதிவு செய்துள்ளார்”.

திரைக்கு வந்து 2 நாட்களே ஆன சுல்தான் திரைப்படம் பைரசி தளங்களில் வெளியாகி இருப்பதை தயாரிப்பாளர் சமூக வலைதள பக்கத்திலேயே நபர் ஒருவர் பதிவு செய்திருப்பது
திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |