சசிகலாவை பற்றி வரும் காலங்களில் எதுவும் பேச வேண்டாம் என உளவுத்துறை முதல்வருக்கு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் நான் சசிகலாவால் முதல்வர் ஆகவில்லை. மக்களால் முதல்வரானேன் கூறுவதால் மக்கள் மத்தியில் உங்களுக்கு நெகட்டிவ் இமேஜை உருவாக்குவது அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் வாக்கு வங்கியாக கருதப்படும் சசிகலாவின் சமூகத்தினரும் உங்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே வரும் காலங்களில் சசிகலாவை பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று முதல்வர் எடபாடிக்கு உளவுத்துறை நோட் போட்டுக்கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனடிப்படையில் கடந்த 2 வாரமாக சசிகலாவை பற்றி முதல்வர் எதுவும் பேசவில்லை என்று கூறப்படுகிறது.