வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுமென்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ்சை பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பல்வேறு மாநில அரசு அதிருப்தி அடைந்திருந்தன. பிரதமர் மோடி கூட வேதனை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறுகையில் , ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஒரு ஆண்டு சிறை . கொரோனா விஷயத்தில் புதுச்சேரி மக்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் உள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வெளியே வந்து போலீசாரிடம் சண்டை போடுகின்றனர். புதுச்சேரி மக்கள் அரசு எடுக்கும் முன் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.தேவைப்பட்டால் புதுச்சேரிக்கு துணை ராணுவம் வரும் என்று முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.