Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மீன்பிடிக்க சென்ற பொதுமக்கள்…. மிதந்து வந்த 3 சிலைகள்…. போலீஸ் விசாரணை….!!

பொதுமக்கள் மீன்பிடிக்க சென்ற ஓடையில் சிலைகள் மிதந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உமரிக்கோட்டை பகுதியில் கோரம்பள்ளம் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டிற்கு செல்லும் உப்பாற்று ஓடையில்  மீன் பிடிப்பதற்காக பொதுமக்கள் சென்றுள்ளனர். அப்போது உப்பாற்று ஓடையில் 3 அம்மன் சிலைகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரி ராமச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் 3 சிலைகளையும் கைப்பற்றியுள்ளனர். அதன்பின் கைப்பற்றப்பட்ட 3 சிலைகளையும்  காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |