ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் சிலையை டிசம்பர் மாதம் திறந்து வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பதவியை டிசம்பர் மாதத்தில் இந்தியா ஏற்க உள்ளது. இதனை முன்னிட்டு காந்தியடிகளின் சிலையை இந்தியா, ஐ.நா.விற்கு பரிசாக வழங்கியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் தலைமையகத்தின் வடபகுதியில் இருக்கும் புல்வெளியில் இந்த சிலை நிறுவப்படவுள்ளது.
டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அன்று ஐக்கிய நாடுகள் சபைக்கு மத்திய வெளியுறவு மந்திரி செல்லும்போது அந்த சிலை திறக்கப்பட இருக்கிறது. சிலை திறப்பு விழாவில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்களாக இருக்கும் 15 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. முதல் தடவையாக ஐ.நா தலைமையகத்தில் காந்தியின் சிலை இடம்பெற இருக்கிறது.