திமுக சட்டதிட்டம் விதி 18, 19 பிரிவுகளின் படி மாநில மாணவரணி தலைவர், செயலாளர், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர் நியமனம் என்று தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மாநில தலைவர் ராஜீவ் காந்தி. மாணவர் அணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்.
மாணவர் அணி இணைச் செயலாளர்கள் ஜெரால்ட், மோகன். மாணவரணி துணைச் செயலாளர்கள் சோழராஜன், தமிழரசன், செந்தில்குமார், ஆனந்த், பொன்ராஜ், கோகுல், பூர்ண சங்கீதா, வீரமணி ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள் என்று திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார். ராஜீவ் காந்தி நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்து சிறப்பாக பணி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. மாணவர் அணித் தலைவர் – செயலாளர் – இணைச் செயலாளர்கள் – துணைச் செயலாளர்கள் நியமனம்.
– தலைமைக் கழகம் அறிவிப்பு#DMK pic.twitter.com/Xw0it1Ddkd
— DMK (@arivalayam) November 25, 2022