Categories
சினிமா தமிழ் சினிமா

‘முல்லை’ இல்லாமல் தொடங்கிய படப்பிடிப்பு… சோகத்தில்’ பாண்டியன் ஸ்டோர்’ குடும்பம்..!!

முல்லையாக நடித்த சித்ரா இல்லாமல் இன்று பாண்டியன் ஸ்டோர் படப்பிடிப்பு தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீரியல் நடிகை சித்ரா நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார். சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் படப்பிடிப்பிற்காக தங்கியிருந்த சித்ரா நேற்றுமுன்தினம் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் வலுவாக எழுந்தது. அதே போல் சித்ராவின் தாய் விஜயா, சித்ராவின் கணவர் அவரை அடித்துக் கொன்று விட்டதாக குற்றம்சாட்டினார்.

இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்ரா தற்கொலைதான் செய்து கொண்டார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் கணவர் மற்றும் தாய் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது. மறைந்த நடிகை சித்ரா இல்லாமல் பாண்டியன் ஸ்டோர் சீரியல் படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளது. சென்னை நசரத்பேட்டையில் நடைபெற்று வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் செட்டில் சித்ராவின் திருவுருவப்படம் திறக்கப்பட்டு பாண்டியன் ஸ்டோர் சீரியலை தொடங்கவுள்ளனர். முல்லை என்ற அழகான கதாபாத்திரம் மூலம் அனைவரின் மனதை கவர்ந்த நடிகை சித்ரா இறப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலம் அனைவரது மனதிலும் இடம் பெற்ற சித்ரா மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்கும் சக கலைஞர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். முல்லை கதாபாத்திரத்தில் இனி யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வாரா? என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் கூறமுடியும். வேண்டும் என்றால் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை இறந்தது போல காட்டினால் ரசிகர்களுக்கு ஓரளவு ஆறுதலாக இருக்கும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

Categories

Tech |