காற்று மாசிலிருந்து தப்பிக்க மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் தலைநகர் டெல்லி, அதன் சுற்றுப்புறப் பகுதிகள் காற்று மாசால் பெரும் அவதிக்குள்ளாகிவருகிறது. இதன் காரணமாக டெல்லி பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளைவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி, பஞ்சாப் மாநில அரசுகள் கோரிக்கைவிடுத்துள்ளன.

இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாடல்களுடன் உங்கள் தினத்தைத் தொடங்குங்கள். வீணை வித்வான் எமானி சங்கரா சாஸ்திரியின் ஸ்வகதம்” என்று பதிவிட்டு அந்தப் பாடலின் தொடுப்பையும் (லிங்க்) கொடுத்துள்ளார்.
Start your day with music. Below is the link to a scintillating thematic composition "Swagatam" by Veena exponent Emani Sankara Sastry.https://t.co/9e4mtx6I64
For more such compositions click onhttps://t.co/yMIlz7rrA9 #IndianMusic https://t.co/9e4mtx6I64
— Prakash Javadekar (@PrakashJavdekar) November 3, 2019