மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைப்பதற்கான கிடங்கு கட்டும் கட்டட பணிகளை மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா நேற்று தொடங்கி வைத்தார்.
பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கிடங்கு கட்டும் கட்டட பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. ரூ. 2 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் 789 சதுரமீட்டர் பரப்பளவில் இந்த மின்னணு வாக்குப்பதிவு இருப்பு கிடங்கு கட்டப்படவுள்ளது.
முதல் நிலை சோதனை அறை, இரண்டாம் நிலை சோதனை அறை பாதுகாவலர் அறை என அமையவுள்ள இந்த கட்டடத்தின் அடிக்கல்லை மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா நட்டார். இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.