Categories
உலக செய்திகள்

START-ஆன 2 ஆம் அலை….. அசுர வேகத்தில் நிரம்பும் மருத்துவமனைகள்….. கொரோனா பீதியில் மக்கள்….!!

கொலம்பியாவில் அசுர வேகத்தில் கொரோனா இரண்டாம் அலை வீசுவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து கொரோனா பரவி ஒரு வருடம் ஆகிய நிலையில், ஒருசில நாடுகளில் இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க நாடான கொலம்பியாவில் இரண்டாம் அலை  வீசி வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் பிப்ரவரி மாதம் வரை தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படாது என கொலம்பியா அரசு அறிவித்துள்ளதால் மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவமனைகளும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தாமதமாக இருக்க வாய்ப்பிருப்பதாக கொலம்பியா பிரதமர்இவான் டுவாக் தெரிவித்திருக்கிறார்.

இருப்பினும் கொரோனா மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உரிய நேரத்தில் மருந்துகளை டெலிவரி செய்து விடுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் சில மருந்து உற்பத்தி நிறுவனங்களின் உதவியுடன் கடந்த வாரம் 6.15 கோடி  தடுப்பூசிகளை கொலம்பியா கொள்முதல் செய்துள்ளது. இதை வைத்து 3.5 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடலாம் என்று கொலம்பியா அரசு திட்டமிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தில் உயர் மற்றும் நடுத்தர நாடுகள் பணத்தை கொடுத்துள்ளதால், குறைந்த பவருமானமுடைய நாடுகள் பயன் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |