Categories
அரசியல்

ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வருகை…… சில நிமிடங்களில் வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல்….!!

திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட திமுக ஸ்டாலின்  அண்ணா அறிவாலயம் வருகை தந்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது .

Image result for ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வருகை

 

தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகின்றது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 20 பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும்  திமுக வேட்பாளர்கள் யார் என்ற அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் அறிவிக்க இருக்கின்றார். இதையடுத்து திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் பட்டியலை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சமாதியில் வைத்து வணங்கிய ஸ்டாலின் தற்போது வேட்பாளர் பட்டியலை அறிவிக்க அண்ணா அறிவாலயத்திற்கு வந்துள்ளார்.வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ள நிலையில் அண்ணா அறிவாலயம் முன்பாக திமுக தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

Categories

Tech |