Categories
மாநில செய்திகள்

இணையவழிக் கல்வி முறை வகுப்பறை கல்விக்கு மாற்று இல்லை – அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்!

இணையவழி கல்வி மூலம் மாணவர்களுக்கு இடையே பாகுபாட்டை அரசு உண்டாக்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இணையவழி கல்வியை அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில் இணையவழி கல்வி மூலம் மாணவர்களுக்கு இடையே பாகுபாட்டை அரசு உண்டாக்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாணவர்களிடையே பாகுபாட்டை உண்டாக்கி மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பாழடித்துவிடக் கூடாது என வலியுறுத்தியுள்ள அவர்,இணையவழிக் கல்வி முறை, நிச்சயமாக வகுப்பறைக் கல்விக்கு மாற்று இல்லை, நிழல் நிஜமாகிவிடாது என்பதை தமிழக அரசு உணர வேண்டும் என கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 1.31 கோடி மாணவர்களில், 60 சதவீதம் பேர் கிராமப்பகுதிகளில் இருக்கிறார்கள்.

இணையவழிக் கல்விக்குத் தேவையான கணினி, மடிக்கணினி, ஸ்மார்ட் போன் போன்றவை கிராமப்புற மாணவர்களிடம் இல்லை என்றும் மாணவர்களுக்கு அரசு அறிவித்த கையடக்க மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அவர் விளக்கம்அளித்துள்ளார். மேலும் இணையவழிக் கல்வி மாணவர்களுக்குத் தேவையில்லாத மன அழுத்தத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். அடிப்படை உட்கட்டமைப்பே இல்லாத நேரத்தில், இணையவழிக் கல்வி ஆபத்தானது என ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |