சாத்தான்குளம் சாத்தான் குளத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட வழக்கு சிபிஐ இடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பேசுபொருளாக மாறி இருந்தது சாத்தான்குளம் செல்போன் வியாபாரம் நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் மரண சம்பவம். இது பலருக்கும் ஆத்திரத்தை மூட்டியது, தமிழக காவல்துறை மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை முற்றிலும் மாறிப்போனது. தேசிய அளவில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்டும், தமிழக காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவித்தும் குரல்கள் ஓங்கி ஒலித்தன.
ஜெயராஜும், பென்னிக்ஸ்சும் உடல்நலக்குறைவால் , இயற்கையான மரணம் அடைந்தார்கள் என தமிழக முதல்வர் தெரிவித்தார். அதேபோல அமைச்சர் கடம்பூர் ராஜு, இது லாக்கப் டெத் இல்லை என்று மறுத்தார். தமிழக அரசின் இந்த விளக்கம் பல்வேறு தரப்பினரையும் அரசை நோக்கி கேள்வி கேட்க வைத்தது.தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக பணியாற்றி, இறப்பு விகிதத்தை குறைத்து அசத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் தமிழக அரசுக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியது.இதோடு எதிர்க்கட்சி திமுகவும் தொடர்ந்து அறிக்கை விட்டு ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நியாயம் கேட்டு ஆளும் கட்சியினர் கலங்க வைத்தது.
இதனிடையே தான் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இந்த வழக்கில் உரிய முறையில் விசாரிக்க வேண்டும். இல்லை என்றால் சிபிஐ விசாரிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடப்படும் என்று தெரிவித்தார். தமிழக அரசு தலா 10 லட்சம் ரூபாய், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கியது. அதுமட்டுமல்லாமல் திமுக சார்பில் குடும்பத்துக்கு 25 லட்சம் நிவாரணம் வழங்கபட்டது.அதிமுக அரசும் 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது. தவறு அரசின் பக்கம் இருக்க போய் தானே 25 லட்சம் கொடுத்தீர்கள். ஒரு இயற்கையான மரணம் என்றால் கொடுத்து இருப்பீர்களா? என்று விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து தமிழக அரசுக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்திய இந்த வழக்கை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அடுத்த நாளே ( நேற்று ) இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. சிபிஐ விசாரணை என்பது அனைவரும் கோரியது, இதை திமுக வைத்து அரசை செய்வதை தடுக்க வேண்டும் என்று அரசு சார்பில் சி.பிஐக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. மொத்தத்தில் சாத்தான்குளம் சம்பவத்தில் முக.ஸ்டாலின் தொடர்ந்து அடித்து வந்த சிக்ஸர் தற்போது முதல்வரால் ஸ்கோர் செய்யப்பட்டது.
நெஞ்சை பதற செய்கிறது:
கடந்த 24ஆம் தேதி ஜெயராஜ்- பென்னிக்ஸ் மரணம் சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் முதல் கண்டன அறிக்கை வெளியிட்டார். அதில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தின் கதறல் நெஞ்சை பதறச் செய்கிறது! இது பழனிசாமியின் ஆட்சியா? காவல்துறையின் ஆட்சியா? ஏவல்துறையாக மாறிவிடாமல் பொறுப்பு உணர்ந்து காவல்துறை செயல்பட வேண்டும்! என்று முழுப்பக்க அறிக்கையில் கண்டனம் தெரிவித்திருந்தார்.
ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தின் கதறல் நெஞ்சை பதறச் செய்கிறது!
உடுமலை சங்கரின் ஆணவக்கொலையில் உரிய ஆதாரங்களைச் சமர்பிக்காமல் கடமை தவறியிருக்கிறது காவல்துறை!
இது பழனிசாமியின் ஆட்சியா? காவல்துறையின் ஆட்சியா?
ஏவல்துறையாக மாறிவிடாமல் பொறுப்பு உணர்ந்து காவல்துறை செயல்பட வேண்டும்! pic.twitter.com/aQbiyEtYdQ
— M.K.Stalin (@mkstalin) June 24, 2020
25 லட்சம் நிவாரணம்: ( 26.06.19 )
இந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்த இருவருக்கும் தலா 10 லட்சம், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என தமிழக அரசு வழங்கியது. இதை விட அதிகமாக திமுக சார்பில் 25 லட்சம் அள்ளிக்கொடுத்து தமிழக அரசையே முந்தினார் ஸ்டாலின். அதோடு தந்தை-சகோதரனை இழந்து, மூன்று பெண்பிள்ளைகளுடன் தவிக்கும் ஜெயராஜ் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. #TNPoliceBrutality -ல் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை கிடைக்க அனைத்து சட்டப் போராட்டங்களுக்கும் திமுக துணை நிற்கும். #JusticeForJeyarajAndFenix என்றும் பதிவிட்டிருந்தார்.
தந்தை-சகோதரனை இழந்து, மூன்று பெண்பிள்ளைகளுடன் தவிக்கும் ஜெயராஜ் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.#TNPoliceBrutality -ல் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை கிடைக்க அனைத்து சட்டப் போராட்டங்களுக்கும் திமுக துணை நிற்கும். #JusticeForJeyarajAndFenix pic.twitter.com/Yd95KNMFTd
— M.K.Stalin (@mkstalin) June 26, 2020
#JusticeForJayarajAndFenix https://t.co/9Gpib4q03G
— M.K.Stalin (@mkstalin) June 26, 2020
27.06:
சாத்தான்குளத்தில் கொலை செய்யப்பட்ட இருவரது போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வராத நிலையில் பென்னிக்ஸ் மூச்சுத்திணறலில் இறந்தார் என்றும், அவரது தந்தை ஜெயராஜ் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார் என்றும் @CMOTamilNadu எதனடிப்படையில் சொன்னார்?#JUSTICEFORJAYARAJANDBENNIX pic.twitter.com/Mfm8BKRtE2
— M.K.Stalin (@mkstalin) June 27, 2020
தவறு அரசின் பக்கம் என்றுதானே அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் கொடுத்தீர்கள்?
இயற்கையான மரணம் என்றால் கொடுத்திருப்பீர்களா?
காவல் நிலையத்தை சாத்தான் வேட்டைக்காடாக மாற்றியவர்களை கொலை வழக்கில் கைது செய்திடுக!#ArrestKillersOfJayarajAndBennix pic.twitter.com/VdslWgFZ34
— M.K.Stalin (@mkstalin) June 27, 2020
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரித்து ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணை கேட்டு திமுக வழக்குத் தாக்கல் செய்யும்!#JusticeforJayarajAndBennix#ArrestKillersOfJayarajAndBennix
— M.K.Stalin (@mkstalin) June 27, 2020
28.06:
பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகத்தினரின் கடும் அழுத்தத்தால் #JayarajandBennix வழக்கை @CMOTamilNadu CBI விசாரணைக்கு மாற்றியுள்ளார்.
நீதி வழங்கும் அரசியல் துணிவும், முதுகெலும்பும் அரசுக்கு இருந்திருப்பின் உயிர்பறித்த காவல்துறையினர் இப்போதும் சுதந்திரமாக உலவ முடியுமா?
— M.K.Stalin (@mkstalin) June 28, 2020
29.06.19:
இரு அப்பாவிகளின் உயிர்பறித்த குற்றவாளிகளைப் பாதுக்காக்க இன்னும் என்னென்ன செய்ய போகிறீர்கள் @CMOTamilNadu?
பதவியை தவறாக பயன்படுத்துபவர்களிடம் இருந்து மக்களை காக்க வேண்டிய முதலமைச்சரே செயலற்று இருப்பது ஏன்?
முதல்வரின் பலவீனம் அதிர்ச்சியளிக்கிறது.#JUSTICEFORJAYARAJANDBENNIX
— M.K.Stalin (@mkstalin) June 29, 2020
#JAYARAJANDBENNIX இருவரும் காயங்கள் ஏதுமின்றி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதை சிசிடிவி காட்சிகளும், ஊடகங்களின் கோப்புகளும் உறுதி செய்கின்றன.
கொலையாளிகளை IPC 302-ன்கீழ் கைது செய்ய வேண்டும் என @CMOTamilNadu-க்கு நான் நினைவூட்ட வேண்டுமா?#ArrestKillersOfJayarajAndBennix pic.twitter.com/AdY7Gxnlne
— M.K.Stalin (@mkstalin) June 29, 2020