கூட்டணி சலசலப்பை முக.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற குர்பானி வழங்கும் நிகழ்ச்சியில் தேமுதிகவின் பொருளாளர் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் , காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் துணிச்சலான செயல் பாராட்டுக்குரியது .

ஸ்டாலின் அரசியல் காரணங்களுக்காக விமர்சனங்களை முன்வைத்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துகிறார்.வைகோவின் கருத்துக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என்ற முறையில் அவர் பதில் சொல்ல வேண்டும். கூட்டணிக்குள் ஏற்படும் சலசலப்பை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.