Categories
உலக செய்திகள்

கனடா பல்கலைக்கழகம்…. “தமிழ் இருக்கை” உருவாக வேண்டும்…. ரூ 10 லட்சம் நிதி வழங்கிய தி.மு.க தலைவர்….!!

கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு “தமிழ் இருக்கை” உருவாக்குவதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 10 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.

கனடாவிலுள்ள ரொறொன்ராப் பல்கலைக்கழகத்தில் “தமிழ் இருக்கை” உருவாக்குவதற்காக கனடா வாழ் தமிழர்களும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் முயற்சி செய்து வருகின்றனர். மேலும் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிதி தர வேண்டும் என்று கனடிய தமிழர் பேரவை நிறைவேற்று இயக்குனர் டன்ரன் துரைராஜா கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதன்படி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ரூபாய் 10 லட்சம் “தமிழ் இருக்கை” உருவாக்குவதற்காக நிதி வழங்கப்படுகிறது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு தமிழுக்காக போராடும் போது திராவிட முன்னேற்ற கழகமும் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் செம்மொழி தமிழின் சிறப்புகள் உலகெங்கும் பரவ வேண்டும் எனவும் இளைஞர்களின் தாய்மொழி தாகம் தீர்க்கப்பட வேண்டும் எனவும்  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |