நாளை தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநில முதல்வர்கள் மற்றும் லட்சத்தீவு மற்றும் அந்தமான் தீவுகளின் லெஃப்ட்னல் கவர்னர்கள் கலந்து கொள்ளக்கூடிய 30-வது கவுன்சில் கூட்டம் கோவளத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தற்போது கடந்த ஐந்து முப்பது மணிக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன், தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக, ஸ்டாலின் தங்கி இருக்கக்கூடிய லீலா ரிசார்ட்க்கு வந்திருக்கிறார்.
கடந்த ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக இந்த சந்திப்பு என்பது நடந்து வருகிறது. இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பாரதிய ஜனதா கட்சிக்கு முரண்பட்ட கொள்கைகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் மற்றும் கேரளா பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும் நிலையில் இந்த இரு மாநில முதல்வர்களும் நாளை மத்திய உள்துறை அமைச்சர் தலைமை நடைபெறக்கூடிய கூட்டத்தில் பல்வேறு கருத்துக்களை முன்வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஜிஎஸ்டி நிதிகள் இன்னும் மாநிலங்களுக்கு கொடுக்கப்படவில்லை. அதேபோல இரு மாநிலன்களின் பல்வேறு பிரச்சினைகள், முல்லைப் பெரியாறு உட்பட நதிநீர் பங்கீடு பிரச்சனைகளில் மத்திய அரசின் தலையிடு குறித்து பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட இருக்கின்றன. அந்த அடிப்படையில் இரு மாநில முதல்வர்களும் தற்போது நாளை என்னென்ன விஷயங்கள் பேசப்படலாம் ? என்பதை விவாதிக்கும் முக்கி சந்திப்பு என சொல்ல படுகின்றது.