கொரோனா குறித்த புள்ளி விவரங்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது; சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விந்தையான எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மாண்புமிகு முதலமைச்சர் கிட்டத்தட்ட அவ்வளவு அரும்பணி ஆற்றி கொண்டிருக்கும் நிலையில், அவரைப்பார்த்து ஸ்டாலின் கூறியிருக்கிறார் காமாலை உள்ளவர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்று.
நாங்கள் திரும்பி சொன்னாள் மஞ்சள் துண்டு அணிந்திருக்கும் கட்சிகளுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் போல தான் இருக்கும். இந்த நேரத்தில் ஒரு அரசோடு கைகோர்க்க வேண்டும், மக்களுக்கு செய்கின்ற பணிகளை பாராட்ட வேண்டும் என்ற வகையில், அதை பாராட்ட மனமில்லாமல் இதுபோன்ற ஒரு கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைப்பது.
தமிழ்நாட்டு மக்கள் இன்றைக்கு ஸ்டாலின் நடவடிக்கைகளையும், திமுக நடவடிக்கைகளையும் நினைக்கிறார்கள். தமிழ்நாடு மக்களின் மத்தியில் அவர்கள் செயல்பாடுகள் இருக்கிறது. இது ஒரு வேடிக்கையான, விந்தையான எதிர்க்கட்சித் தலைவராக தான் ஸ்டாலின பார்ப்பார்களே ஒழிய ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வில்லை.
புள்ளிவிவரம் என்பது அதில் எந்த தவறும் கிடையாது .அவ்வப்போது மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை 38 எம்பி இருக்கிறார்கள். சைலன்ட்ல இருக்காங்க அதே போல இவரும் சைலண்டா வீட்டில் இருந்தால் தமிழ்நாட்டில் கொரோனோவை முழுமையாக ஒழித்து விடலாம்.