திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரபல நடிகர் பார்த்திபன் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் வரும் மே 7ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்கிறார். இதை தொடர்ந்து பல்வேறு அரசியல் பிரமுகர்களும், திரை பிரபலங்களும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, இன்று. இதோ. இப்போது உதிக்கும் சூரியன், புதிய சூரியனல்ல. உதய சூரியன்.
நீண்ட காலம் ஆண்ட, பத்தாண்டு பொறுமை சின்னத்தின் முதல்வராக ஆட்சி புரிந்தவர் இனி, இனிய தமிழக முதல்வராக! வாழ்த்துகள் திமுகவின் அபரிமித வெற்றிக்கும்,மாண்புமிகு ‘உதய்’சூரியனுக்கும்! என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ட்விட்டில், திரு. முக.ஸ்டாலின் அவர்கள் மட்டும் முதல்வர் அல்ல,நானும் முதல்வனே! கோவையில் இன்றைய முதல்வருக்கு அன்றே “அடுத்துத் தாங்களே”-என மஞ்கள் துண்டு அணிவித்து வாழ்த்தியதில் முதல்வன் ஆனேன்! என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று…இதோ…இப்போது உதிக்கும் சூரியன், புதிய சூரியனல்ல… உதய சூரியன். நீண்ட காலம் ஆண்ட, பத்தாண்டு பொறுமை சின்னத்தின் முதல்வராக ஆட்சி புரிந்தவர் இனி, இனிய தமிழக முதல்வராக!வாழ்த்துகள் திமுகவின் அபரிமித வெற்றிக்கும்,மாண்புமிகு ‘உதய்’சூரியனுக்கும்!conti…
— Radhakrishnan Parthiban (@rparthiepan) May 3, 2021
Continue….
திரு மு க ஸ்டாலின் அவர்கள் மட்டும் முதல்வர் அல்ல,நானும் முதல்வனே!!!
கோவையில் இன்றைய முதல்வருக்கு அன்றே “அடுத்துத் தாங்களே”-என மஞ்கள் துண்டு அணிவித்து வாழ்த்தியதில் முதல்வன் ஆனேன் !— Radhakrishnan Parthiban (@rparthiepan) May 3, 2021