Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு மீது வேண்டுமென்றே ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார் – முதல்வர் பழனிசாமி பேட்டி!

தமிழக அரசு மீது வேண்டுமென்றே ஸ்டாலின் குற்றம் சாட்டிவருகிறார் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

இன்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயரதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என கூறியுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் உள்ள 9 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

சீனாவிடம் ஆர்டர் செய்யப்பட்ட ரேபிட் கருவிகளில் முதற்கட்டமாக 24,000 கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளது. ஊரடங்கை தளர்த்துவது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே தமிழக அரசு மீது ஸ்டாலின் குற்றம் சாட்டிவருகிறார்.

எதிர்க்கட்சி தலைவர் என்றால் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். மேலும் தினந்தோறும் ஏதாவது ஒரு அறிக்கையை வெளியிட்டு குறை கூறுவதற்கு பதில் கூற முடியாது அரசுக்கு ஆலோசனை கூற எதிர்க்கட்சியினர் என்ன மருத்துவர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார் அரசை குற்றம் சொல்லும் நேரமா இது? மக்களை காக்க வேண்டிய நேரம் இது என அறிய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |