இந்தியாவிலேயே தமிழக அரசியல் ஒரு விசித்திரமானது. திமுக-அதிமுக என இரு துருவங்களாக இருந்து தமிழக அரசியலில் ஆளுமை செலுத்தி வரும் இவர்கள் செய்யும் அரசியல் அலப்பறைக்கு அளவே கிடையாது. அதை நாம் பேரிடரில் வெளிப்படையாக பார்க்க முடிந்தது. கொரோனா தொடங்கியதுமே எதிர்க் கட்சியான திமுக ஆளும் கட்சியிடம் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என்று கோரிக்கை வைத்தது, அதை செவிசாய்க்காமல் புறம் தள்ளியது ஆளும் அதிமுக அரசு.
நீங்கள் என டாக்டரா?
அரசியல் கட்சியினரை கூட்டி பேசுவதற்கு அவர்கள் என்ன டாக்டரா ? என்று எடப்பாடி பதிலளித்தார். இப்படித்தான் கடந்த 50க்கும் மேற்பட்ட நாட்கள் கொரோனா ஊரடங்கு காலம் உருண்டோடின. ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் எதையாவது ஒன்றை சொல்லிக் கொண்டே இருக்கிறார். அது சரியில்லை, இது சரியில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை விடுகிறார். குறையைத் தேடித்தேடி கண்டுபிடிக்கிறார் என்று அதிமுகவின் சார்பிலும் விமர்சனங்கள் பிரதானமாக முன் நிறுத்தப்பட்டது.
பல விமர்சனங்கள்:
திமுக தலைவர் மு க ஸ்டாலின் கொரோனா ஊரடங்கு, தடுப்பு பணி காலத்தில் அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பட்டியலிட்டு விமர்சித்தார். பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு, கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பரவல், கொரோனா பரிசோதனை, ரேபிட் டெஸ்ட் கிட், நிவாரணம், அம்மா உணவகத்தில் இலவச உணவு, மருத்துவ உபகரண விலை, உள்ளிட்ட ஏராளமான விஷயங்களை தனது ட்விட்டர் மூலம் ஆளும் அரசுக்கு கேள்வியாகவும், கோரிக்கையாகவும், கண்டனமுமாகவும், விமர்சனமாகவும் முன்வைத்து அடுக்கினார்.
நாங்களும் செயல்படுவோம்ல:
ஒரு முதலமைச்சர், ஒரு ஆளும் அரசு இந்த பேரிடரில் எப்படி செயல்படுவார் என்று எங்கள் கட்சியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ? என்று தமிழக அரசு என்னவெல்லாம் செய்ததோ அதே போல் திமுகவும் செய்தது. அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினால் ஒருபக்கம் மு க ஸ்டாலின் தன்னார்வலர்களுடனும், கட்சி நிர்வாகிகளுடனும் காணொளியில் ஆலோசனை நடத்தினார். முதலமைச்சர் சமூக ஊடகம் வாயிலாக மக்களிடம் பேசினால், முக ஸ்டாலினும் சமூக ஊடகம் மூலமாக மக்களிடம் பேசினார். முதலமைச்சர் நடத்தவேண்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தை முக.ஸ்டாலின் நடத்தினார். ஊரடங்கிலும் கூட டாஸ்மார்க் கடை எதிர்ப்பு போராட்டம் என்று தொடர் செயல்பாட்டில் திமுக இருந்து கொண்டே இருந்தது.
அதிர்ச்சியில் அதிமுக:
தொடர் விமர்சனங்களை ஒருபக்கம் மு க ஸ்டாலின் வைத்துக்கொண்டு இருந்தாலும், மறுபக்கம் அதிமுகவிற்குள்ளே குடைச்சல் ஏற்ப்படுத்தும் வகையிலும் கேள்விகளை சரமாரியாக எழுப்பினார். இது அதிமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து ஏன் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச மறுக்கிறார். சுகாதாரத்துறை செயலாளர் ஒருநாள் பேசுகிறார், ஒருநாள் தலைமைச் செயலாளர் பேசுகிறார் என்ன நடக்கிறது அதிமுகவுக்குள் ? விஜயபாஸ்கர் ஒதுக்காடுகிறாரா ? என்று யோகிச்சிக்க வைக்கும் அளவிற்கு, நினைத்துக்கூட பார்க்க முடியாத கேள்விகளை அதிமுக மீது எறிந்தார் முக ஸ்டாலின்.
ஸ்டாலினின் பரபரப்பு அறிக்கை:
முகஸ்டாலின் கேள்விகளுக்கு செவி கொடுக்காமல் ஆளும் அரசு பணிகளை முன்னெடுத்துச் சென்று கொண்டே இருந்த நிலையில்தான் நேற்று முக .ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை அதிமுக கட்சிக்குலே நடுக்கத்தை உண்டாக்கியுள்ளது. ஸ்டாலினின் அறிக்கையில் உள்ள கருத்தை யோசித்துப் பார்த்தல் ஸ்டாலின் சொல்வது உண்மைதானா ? அதிமுகவில் சலசலப்பு இருப்பது உண்மைதானா ?என்று சாமானிய மக்களுக்கும், அரசியல் நோக்கங்களுக்கும் நினைவூட்டும் வகையில் இருந்துள்ளது.
முன்னிலைபடுத்தும் எடப்பாடி:
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேற்று மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை, கொரோனா தடுப்பு பணி தடுப்பு குழுவில் மக்கள் பிரதிநிதிகளையும், அமைச்சர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் பணிகளை வேகமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று சுட்டிக்காட்டி அந்த அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் எடப்பாடி பழனிச்சாமி தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக கொரோனாவை கட்டுப்படுத்த அரசு அமைத்துள்ள சிறப்பு குழுவில் மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் இடம்பெறாமல் செய்துள்ளார் என்பதை ஸ்டாலின் கண்டித்திருந்தார்.
எங்களோடு வாழுங்கள் எடப்பாடி:
அறிக்கை மூலமாக பல்வேறு அம்சங்களை பேசிய மு க ஸ்டாலின், கொரோனவோடு வாழப் பழகுவோம் என்று அரசு பிரச்சாரம் செய்யும் நிலைக்கு வந்துள்ளது. அதேபோல நிர்வாக ரீதியாக முதல்வரும் மக்கள் பிரதிநிதிகளுடன் வாழ பழகிக்கொள்ள வில்லையா ? என்று கேள்வி எழுப்பினார். மேலும் ஸ்டாலின் வைத்த பல விமர்சனம், ஒவ்வொன்றும் ஆளும் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலைப்படுத்தப்படுவதாகவே இருந்தது. இது அதிமுகவுக்கு அதிமுகவிற்கு நிர்வாகிகளுக்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டாலின் குறிப்பிட்ட விஷயங்கள்:
முக.ஸ்டாலின் ஆராய்கையில் குறிப்பிட்டுள்ள விஷயங்களில் பிரதானமானவை, தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவிற்கு நிதியமைச்சர் தொழில்துறை அமைச்சர் தலைமை வகிக்க வேண்டும், ஆனால் அவர் அந்த குழுவில் உறுப்பினராக கூட இடம்பெறவில்லை. மாநிலத்தின் நிதி நிலைமையை சீர்படுத்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான உயர்நிலைக் குழுவில் நிதியமைச்சர் உறுப்பினராக கூட இல்லை. நான் அதிமுகவுக்காகவும் தான் பேசுகிறேன் என்று தெரிவித்தார்.
முன்னிலைபடுத்திக் கொள்ளும் எடப்பாடி:
எடப்பாடி பழனிசாமி தனது அமைச்சரவை சகாக்களை நம்பாமல் தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தி முக்கியத்துவம் தேட முயற்சிக்கிறார் என்று ஸ்டாலின் பரபரப்பை கிளப்பினார். ஏனெனில் தமிழகத்தில் இதற்கு முன்பு கூட இது போன்ற பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டன. அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும், அனைத்து சர்வ வல்லமை கொண்ட தலைவராக எடப்பாடி பழனிச்சாமி முன்னிலைப் படுத்தப் படுகிறார். ஆட்சி அதிகாரத்திலும், கட்சியிலும் அவர் ஒருவரே தலைவர் என முன்னிலைப்படுத்தப்படுகின்றார் என்று ஏராளமான செய்திகள் வந்துகொண்டு தான் இருந்தன. அதனை மீண்டும் நினைவூட்டும் வகையில் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை அதிமுக புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.