Categories
அரசியல்

24 மணி நேரம் ஆச்சு…. ரொம்ப மோசமா இருக்கு… அதிர்ச்சியில் ஸ்டாலின் …!!

கொரோனா பாதிக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல்நிலை  கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் பரவுவதை கட்டுப்படுத்த மாநில அரசு போராடி வருகிறது. கொரோனா தாக்குதல் சட்டமன்ற உறுப்பினரையும் விட்டுவைக்கவில்லை. கொரோனவால் பாதிக்கப்பட்ட முதல் சட்டமன்ற உறுப்பினராக ஜெ.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவல் திமுகவினரை அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ஜெ.அன்பழகனுக்கு வெண்டிலேட்டர் மூலம் 80 சதவீத ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது என்று கூறியுள்ள மருத்துவமனை நிர்வாகம் 24 மணி நேரமாக ஜெ.அன்பழகன் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவித்துள்ளது இதனால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |