Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் அவர்களே….! ”போராடி, வாதாடுங்க” செவிடன் காதில் சங்கு ஊதின இருக்காதீங்க…!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனே மாதம் மின்கட்டணத்தை கணக்கிடுவோம் என்று சொன்னார்கள். தேர்தல் வாக்குறுதியில் சொன்ன மாதிரி கணக்கிடுங்கள். மாதம் மாதம் மின் கட்டணத்தை கணக்கிட்டால் உயராது, இதில் பாதி தான் உயரும், அதை செய்ய மாட்டோம் என்கிறார்கள். ஏனென்றால் இவ்வளவு கட்டண உயர்வு, வரி உயர்வு உயர்த்திருக்கிறார்கள்.

அதோட மின்சார மீட்டர் வாடகை வேற போடுறாங்களாம். இன்னும் தெரியவில்லை. அதற்கான அறிவிப்பு  இன்னும் முழுதாக வரவில்லை. இதே தாக்குப் பிடிக்க முடியவில்லை, இதற்கு மேல் மீட்டர் வாடகை. அதோட இங்கே விசைத்தறி நிறைந்த பகுதி அதற்கு கட்டணம் 1 ரூபாய் 40 காசுகள் உயர்த்துவதாக தெரிவித்து இருக்கிறார்கள், ஒரு யூனிட்டிற்கு 1 ரூபாய் 40 காசுகள்.

ஏற்கனவே நூல் விலை ஏறிப்போய், தறி ஓட்ட முடியாமல், தறி எல்லாம் மூடி இருக்கிறது. அந்த தறி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அதில் இருக்கின்ற தொழிலாளிகள் பாதிக்கப்படுகிறார்கள், வேலை இல்லாமல் நொடிந்து போயிருக்கிறார்கள். இரண்டு ஆண்டு காலம் கொரோனா வைரஸ் தொற்று கடுமையானதிலிருந்து மூடி கிடந்த அந்த விசைத்தறி எல்லாம் இப்போதுதான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இப்போது நூல் விலை ஏற்றத்தினால் அந்த தொழில் எல்லாம் நலிவடைந்து இருக்கிறது, அதை சீர் செய்ய வேண்டும் என்று நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்கள் சட்டமன்றத்தில் அண்ணா திமுக சார்பில் பேசினார், நான் அண்ணா திமுக சார்பாக அறிக்கை வெளியிட்டேன். விடியா திமுக அரசே, திமுக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே…

இன்றைக்கு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் விசைத்தறியில் ஈடுபட்டு இருக்கிறார்கள், அந்த தொழில் முடங்கக்கூடிய அபாயம் இருக்கிறது. நூல் விலையினால் தொழில் சரிந்து இருக்கிறது, நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் போராடி, வாதாடி இன்றைக்கு அதிகமான நூலை இறக்குமதி செய்து, தமிழ்நாட்டிற்கு விசைத்தறி தொழில், நெசவு தொழில் செய்கின்ற நெசவாளர்களை காப்பாற்ற வேண்டும், விசைத்தறி ஆலைகளை காப்பாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தோம். செவிடன் காதில் சங்கு ஊதியது போல் எதுவுமே செய்யவில்லை என தெரிவித்தார்.

Categories

Tech |