Categories
அரசியல் மாநில செய்திகள்

அல்வா கொடுத்த ஸ்டாலின்…! உண்மையை ஒத்துகிட்ட DMK… சம்பவம் செய்த செல்லூர் ராஜீ …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் சொல்லுறாரு மதுவிலக்கு இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கி காட்டுவேன் என்று சொன்னார். கொரோனா காலத்திலும் மது கடைகளை திறந்தவர் நம்முடைய முதலமைச்சர்.  ஆக பேச்சுக்கு ஒன்று, செயல்பாடு ஒன்றாக இருக்கிறது. அதே மாதிரி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு மது கூட தமிழகத்தில் இருக்காது என்று முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவராக இருந்து, தேர்தல் பிரசாரத்தில் கர்ஜித்தார்..

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான் திமுக வருவதற்கு காரணம். கொஞ்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சிக்கு வந்து இருக்காங்க. அரசு ஊழியர்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, மக்களுக்கு அல்வா கொடுத்து விட்டார்கள், அவர்களுக்கும் அல்வா கொடுத்துவிட்டார்கள்,  அவ்வளவுதான் இந்த அரசாங்கம். இது உண்மையிலேயே அவரே ஒத்துக் கொண்டார். வருகின்ற காலத்திலாவது செய்கிறார்களா என்று பார்ப்போம் ?

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகின்ற ஆட்சியாக தான் இருக்கிறது. இதாய் தான் மக்களும் நினைக்கிறார்கள். மதுரையில் கூட பாருங்கள் முதலமைச்சர்  திறந்து வைத்தார்,  தமுக்கம் கலையரங்கம், கலாச்சாரம் மையம் எவ்வளவு அருமையாக இருக்கிறது ? எப்படி கட்டிருக்கிறோம் ? எப்படி இருக்கிறது? அதேபோல் வாகன நிறுத்தம் கட்டடம்…

மீனாட்சி அம்மன் கோவில் அருகில் எப்படி இருக்கிறது? இது அதே மாதிரி என்னுடைய மேற்கு தொகுதியில் 18 கோடி ரூபாயில்  தடுப்பணை, அந்த பகுதியில் இருக்கின்ற எத்தனை விவசாயிகளுக்கு தேவைப்பட்டது. இன்றைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கின்ற நிலத்தடி நீர் கூடி இருக்கிறது.நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை இவர்கள் வந்து திறந்து வைக்கிறார்கள்.  வருடம் ஒன்னரை ஆகிவிட்டது,  இவர்கள் புது திட்டத்தை கொண்டு வந்து,  இன்னும் தொடங்கவில்லை எனவும் விமர்சித்தார்.

Categories

Tech |