Categories
மாநில செய்திகள்

தமிழகம் அப்படி இல்லை…. கேட்கவே பயமா இருக்கு…. முக.ஸ்டாலின் எச்சரிக்கை…|!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பேசுகையில், .

இப்பொழுது நோய்த்தொற்று ஏற்படுவது மிக மோசமான நிலையில் இருக்கின்றது. உடல் வலிமையை இந்த நோய்த்தொற்று இழக்க வைக்கின்றது. வட மாநிலங்களில் இருந்தும் நமது பக்கத்து மாநிலங்களில் இருந்து வரக்கூடிய தகவல்கள் அச்சம் தரக்கூடியதாக இருக்கின்றது. அந்த அளவுக்கு தமிழகம் மோசம் அடையவில்லை என்றாலும், பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெரும் தொற்று தீவிரமாக பரவி கொண்டு இருக்கின்றது.

தினந்தோறும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிய தொற்றால் பாதிக்கப்படுகின்றார்கள். இரண்டு வாரங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அப்படி அதிகமானால் நோயை கட்டுப்படுத்துவது மருத்துவத்துறைக்கு மாபெரும் சவாலாக ஆகிவிடும். அவர்கள் இப்போதே மிக மிக கடினமாக தன் உயிரை பணயம் வைத்து செயல்பட்டுக் கொண்டு வருகிறார்கள். இதன் தொடர்பாக அரசு அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினேன். கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்னொரு ஊரடங்கு அவசியம் என்று அதிகாரிகள் சொல்கின்றார்கள். இது தொடர்பாக மருத்துவ நிபுணர்களிடம் கேட்டபோதும் அவர்களும் அதையே பரிந்துரை செய்கிறார்கள் என ஸ்டாலின் கூறினார்.

Categories

Tech |