ஸ்டாலின் கொரோனாவை தடுக்க தன்னலமற்று பணிபுரிபவர்களை கொச்சைபடுத்தும் விதமாக குற்றம் சாட்டுகிறார் என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கொரோனா தொற்றைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அரசு மீது எந்தவித ஆதாரமும் இன்றி குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சுமத்தி வருவது மிகுந்த வருத்தமளிக்கிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் இணையதளத்தில் எந்த ஒரு ஒளிவு மறைவுமின்றி வெளியிடப்படுகின்றது. இருந்தும் ஸ்டாலின் குற்றம் சாட்டுவது அவரது சந்தர்ப்பவாத அரசியலை சுட்டிக்காட்டுகிறது. ஸ்டாலினின் குற்றசாட்டு தன்னலமற்று தடுப்பு நடவடிக்கைகளில் பணியாற்றுபவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.