Categories
அரசியல் மாநில செய்திகள்

சந்தர்ப்ப சூழ்நிலையில் முதல்வர் ஆன ஸ்டாலின்; இலங்கை போல இங்கும் நடக்கும் – எச்சரிக்கும் எடப்பாடி

அதிமுக தொண்டர்களிடம் பேசிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி,  ஸ்டாலின் அவர்களே… அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எத்தனையோ அவதாரத்தை மேற்கொண்டு இருக்கிறீர்கள். எந்த அவதாரமும் எடுபடாது. இங்கே தலைவருக்கு குடும்பம் கிடையாது. நாங்கள் தான் பிள்ளைகள்.

திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கு தான் பல பதவி கிடைக்கும். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களையும்,  நிர்வாகிகளையும் வீழ்த்த முடியாது.ஏதோ நீண்ட காலமாக நீங்க கனவு கண்டிருக்கின்றீர்கள். சந்தர்ப்ப சூழ்நிலையிலே இன்றைக்கு முதலமைச்சராக ஆகியிருக்கிறீர்கள்.

நாட்டு மக்களை மறந்து, மக்கள் விரோத ஆட்சி செய்து கொண்டு இருக்கின்ற இந்த வேளையில் எச்சரிக்கின்றோம்.  மக்களை மறந்தால் அருகில் இருக்கின்ற இலங்கை நாட்டில் என்ன நடந்ததோ, அதே நிலைமை இங்கேயும் நிகழும். விலைவாசி உயர்வு, ஸ்டாலின் கவலைப்படவில்லை.

கோர்ட் சூட் போட்டு கொண்டு, இன்றைக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். தினமும் பத்திரிக்கையில் போஸ் கொடுப்பதோடு, அவரின் பணி முடிந்து போச்சு. ஓட்டு போட்டு மக்களுக்கு நம்மை செய்யல. ஆட்சி உருவாக்கி தந்து இருக்கின்ற மக்களுக்கு நன்மை செய்யல.

வீட்டு மக்கள், ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மிகப் பெரிய பணக்கார குடும்பமாக வருவதற்கு இந்த ஆட்சியை பயன்படுத்திக்  கொண்டிருக்கிறார்கள். இன்னைக்கு ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, கடைக்கோட்டில் இருக்கின்ற ஏழைகளை சிந்தித்து பார்த்து, அவர்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்கின்ற ஒரே கட்சி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.

ஸ்டாலின் அவர்களே….  எப்பொழுது தேர்தல் வரும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். தேர்தல் வருகின்ற போது  இதற்கெல்லாம் சரியான முடிவு கட்டுவார்கள்; சரியான தீர்ப்பை வழங்குவார்கள். அது நல்ல தீர்ப்புவாக இருக்கும். ஸ்டாலின் அவர்களே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தி விடலாம் என்று கனவு காணாதீர் என தெரிவித்தார்.

Categories

Tech |