அரசியல் லாபத்துக்காக மக்களை பயன்படுத்திவிட்டு கசக்கி எறிவதை ஸ்டாலினும், மம்தாவும் கையாண்டுவருவதாக பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வருகை தந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “தனி பெரும்பான்மை கட்சியாக பாஜக வராவிட்டாலும் அதிகப்படியான வாக்குகளை பெற்ற கட்சியாக ஜார்கண்டில் நிலைபெற்றுள்ளது. தேர்தல் அந்தந்த மாநிலத்தின் நிர்வாகங்களை அடிப்படையாகக்கொண்டது. கூட்டணி சரியாக அமையவில்லையென்றால் மிகப்பெரிய சறுக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது.
எனவே திமுக இது போன்ற ஏமாற்று வேலைகளை விட்டுவிட்டு மக்களுக்கு உருப்படியான முறையில் சேவை செய்ய வேண்டும். பிரச்னைகளின் மூலம் அரசியல் ஆதாயத்துக்காக லாபம் தேடிவிட்டு பிறகு மக்களை கசக்கி எரியும் வழக்கத்தை தமிழ்நாட்டில் திமுக கட்சியும், மேற்கு வங்கத்தில் மம்தாவும் கையாண்டு வருகின்றனர், இது முறையானதல்ல” என்றார்.