Categories
அரசியல்

ரேபிட் டெஸ்ட் கருவிகள் கொள்முதலில் தமிழக அரசு முறைகேடு… ஸ்டாலின் குற்றசாட்டு!

ராபிட் டெஸ்ட் கருவிகளை அதிக விலைக்கு வாங்கியது ஏன் என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரேபிட் கருவிகளை ரூ.400க்கு மிகாமல் நிறுவனங்கள் விற்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 245 ரூபாய் மதிப்புள்ள ரேபிட் பரிசோதனை கருவிகளை தமிழக அரசு ரூ.600 கொடுத்து வாங்கியது ஏன்? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவக்கருவிகளை ஐசிஎம்ஆர் அமைப்பினால் அங்கீகரித்துள்ள நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக வாங்காமல் தனியார் நிறுவனத்திடம் வாங்கியதற்கு என்ன காரணம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுமார் 50,000 ரேபிட் கருவிகள் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதிக விலைக்கு வாங்கப்பட்ட ரேபிட் கருவிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் துல்லியமாக இருக்கிறதா? என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், கொரோனா பரிசோதனைக்கு, ஆர்டி பிசிஆர் டெஸ்ட் மட்டும் மிக சிறந்தது என ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. 2 சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது. இதுவரை, 2 சீன நிறுவனங்களிடமிருந்தும் 5.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |