உலகின் மிகப்பெரிய அகமதாபாத்தில் உள்ள கிரிக்கெட் மைதானமானது நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த ஸ்டேடியத்தில் சர்வதேச போட்டிகள் முதல் முறையாக இன்று துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான இந்த ஸ்டேடியத்தை முறைப்படி திறந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா போன்ற பலர் பங்கேற்றனர். இதனையடுத்து சர்தார் படேல் மைதானம் என்று அழைக்கப்பட்ட இந்த ஸ்டேடியம் நரேந்திர மோடி மைதானம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. மேலும் அதி நவீனவசதிகளைக் கொண்ட இந்த மைதானத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் அமரலாம் என தெரிவித்துள்ளனர்.