Categories
உலக செய்திகள்

புதுப்பொலிவு பெற்ற சுவிஸ் நகர்…. 20 வருடங்கள் கழித்து சீரமைப்பு…!!!

சுவிட்சர்லாந்து நாட்டின் Basel நகரின் அடையாளமாக விளங்கும் ஜேக்கப் பார்க் கால்பந்து மைதானம், 20 வருடங்களுக்கு பின் மறுசீரமைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

சுவிட்சர்லாந்தின் நாட்டின் பேசல் நகரத்தின் கடந்த 2001-ஆம் வருடத்தில், அமைக்கப்பட்ட ஜேக்கப் பார்க் கால்பந்து மைதானம், சுமார் 20 வருடங்கள் கழித்து,சீரமைக்கப்படுகிறது. பேசல், நகர்ப்புறத்தின் அடையாளமாக விளங்கும் இந்த மைதானத்தில் சுமார் 35,600 இருக்கைகள் இருக்கிறது .

இவ்வாறு புதிப்பிப்பதன் மூலம், போட்டி நடைபெறாத சமயங்களிலும், அரங்கத்தை திறந்து வைக்கலாம் எனவும், மக்கள் அணுகவும் முடியும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த சீரமைப்புகள்,  சுற்றுச்சூழல் நிலையின் பல அம்சங்களை ஒருங்கிணைக்கிறது. இது மட்டுமல்லாமல், மைதானத்தின் சமூக நலனிற்காக, மொட்டை மாடியின் சுற்றளவு விரிவுபடுத்தப்பட்டிருப்பது  பார்வையாளர்களின் எண்ணத்தை மேம்படுத்தும் என்று கூறப்பட்டிருக்கிறது.

மேலும், நூலகம், ஆடிட்டோரியம், மற்ற பொது வசதிகள் அனைத்தும் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |