வாய் தகராறு காரணமாக பழ வியாபாரி வாலிபர்கள் இருவரை கத்தியால் குத்தியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே பூச்சநாயகம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி மற்றும் கணேசன் கூலித் தொழிலாளர்களான இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். கோவில் திருவிழா நடந்து வரும் நிலையில் நேற்றிரவு கணேசன் மற்றும் கார்த்தி இருவரும் கோயில் திருவிழாவிற்கு சென்றுள்ளனர்.
கோபியை சேர்ந்த பாபு என்கிற மேகநாதன் என்பவர் தள்ளுவண்டியில் அண்ணாச்சி பழம் வைத்து வியாபாரம் செய்து வருபவர். கார்த்தியும் கணேசனும் அவ்வழியாக சென்ற போது மேகநாதன் மீது இடித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு இதில் கோபம் கொண்ட மேகநாதன் அண்ணாச்சிபழம் வெட்ட வைத்திருந்தக் கத்தியை எடுத்து கணேசனின் வலப்பக்க தோளில் குத்தியுள்ளார். இதனை கண்டு தடுக்க முயன்ற கார்த்திக்கும் வலது மணிக்கட்டு குத்தியுள்ளார் மேகநாதன்.
இதனை தொடர்ந்து இருவரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.