மாசி திருவிழாவிற்காக பொதுமக்களிடம் பணம் வசூலித்தது பிடிக்காமல் தலைவரை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் காலனியை சேர்ந்தவர் பாலையா. கிராம தலைவரான இவர் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா நடைபெற இருப்பதையொட்டி விழா சிறப்பாக நடைபெற வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் பணம் வசூலித்து வந்துள்ளார். தலைவரின் செயலிற்கு அகரம் காலனியை சேர்ந்த சதீஷ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் சதிஷ் பாலையா இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறில் கோபம் கொண்ட சதீஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தலைவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் பாலயாவை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு பரங்கிப்பேட்டை காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கத்தியால் வெட்டிய சதீஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.