Categories
தேசிய செய்திகள்

“60 முறை கத்தி குத்து” தலித் வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்‌… நடு ரோட்டில் கோஷமிட்ட கும்பல்….. பெரும் பரபரப்பு….!!!!

டெல்லியில் ஒரு இளைஞனை 3 பேர் கொண்ட கும்பல் 60 முறை கொடூரமான முறையில் குத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக மணிஷ் என்ற இளைஞரிடம் காசிம் மற்றும் முஹ்சீன் என்பவர்கள் செல்போனை பறித்துள்ளனர். அதோடு மணீஷை கத்தியால் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் குத்தியுள்ளனர். இது குறித்து மணிஷ் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் குற்றவாளிகள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக காசீம் மற்றும் முஹ்சீம் கூட்டாளிகள் மணீஷ் வீட்டுக்கு சென்று மிரட்டியுள்ளனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மணீஷ் குற்றவாளிகள் 2 பேருக்கும் எதிராக சாட்சி கூறினார்.

அதோடு மிரட்டல் பற்றியும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காசீம் மற்றும் முஹ்சீம் கூட்டாளிகளான பைஜாம், ஆலம், பிலால் ஆகிய 3 பேரும் பட்டப் பகலில் நடுரோட்டில் மணீஷை 60 முறை கத்தியால் கொடூரமான முறையில் குத்தி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை சுற்றி நின்று வேடிக்கை பார்த்த பொது மக்களில் ஒருவர் கூட மணீஷை காப்பாற்றுவதற்கு முன் வரவில்லை. இந்நிலையில் இளைஞரை கொலை செய்த குற்றவாளிகள் இன்னும் 2 பேரை நாங்கள் கொலை செய்வோம்‌‌. வந்து உடலை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கோஷமிட்டபடியே ரோட்டில் நடந்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த ஆதாரங்களை வைத்து காவல் துறையினர் குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாஜக கட்சியின் தலைவர் கபில் மிஷ்ரா, ஜிகாதிகள் மீண்டும் தலித் இளைஞரை கொலை செய்து விட்டனர் என்ற டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்‌. மேலும் இரு வேறு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் பொதுமக்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |