நடிகை ஸ்ருதிஹாசன் தனது பெஸ்டியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கிராக் மற்றும் வக்கீல் சாப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது விஜய் சேதுபதியின் ‘லாபம்’ திரைப்படத்திலும், பிரபாஸின் ‘சலார்’ படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாந்தனு என்பவருடன் நெருக்கமாக புகைப்படங்களை எடுத்து பதிவிட்டுள்ளார். மேலும் இந்த லாக் டவுனில் எனது பெஸ்டியுடன் இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
https://www.instagram.com/p/COxZ6K4hhE-/?igshid=1rswu4l7kfp94