இலங்கையில் ஒவ்வொரு நாளும் நிதி நெருக்கடி அதிகரிப்பதால் நாட்டிலிருந்து இளைஞர்கள் அதிக அளவில் வெளியேறிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி பல இன்னல்களை சந்தித்து கொண்டிருக்கிறது. அங்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள்களுக்கு கடுமையாக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் அந்நாட்டிலிருந்து அதிகமாக இளைஞர்கள் வெளியேறிக் கொண்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான இளம் பெண்களும் இளைஞர்களும் நாட்டில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பாராளுமன்றத்தில் பேசிய தயாசிறி ஜெயசேகர் தெரிவித்ததாவது, பொருளாதார அடிப்படையில் நாடு பலவீனமாக இருக்கிறது. கடந்த மாதத்தில் பணவீக்கம் 54 சதவீதமாக இருக்கிறது.
பணவீக்கத்தில் ஜிம்பாப்வே நாடு முதலிடத்தில் இருக்கும் நிலையில் அதற்கு அடுத்த இடத்தில் தற்போது இலங்கை இருக்கிறது. ஜனவரி மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் பணவீக்கம் 10-லிருந்து 15 சதவீதம் உயர்ந்திருக்கிறது. தற்சமயம் மக்கள் 20, 50 மற்றும் 100 ரூபாய் தாள்களை கொண்டு பொருட்கள் வாங்க முடியாமல் இருக்கிறார்கள். வருங்காலத்தில் ஐந்தாயிரம் ரூபாய் நோட்டிற்கு கூட மதிப்பின்றி போகும்.
பண வீக்கம் 54% உள்ளது. வங்கி வட்டி விகிதம், 20-லிருந்து 54% வரை உள்ளது. இப்படி இருக்கும் போது ஒரு நாடு எவ்வாறு செயல்படும் என்று கூறியிருக்கிறார்.