இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, நாட்டு மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இலங்கை கடும் நெருக்கடியான நிலையில் இருக்கிறது. இந்நிலையில், அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அதன்பிறகு, போராட்டக்காரர்கள் அவரின் அரசையும் எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது பற்றி அவர் தெரிவித்ததாவது, நாட்டின் சட்டன் அடிப்படையில் அனைத்து மக்களும் அமைதியான வழியில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதி இருக்கிறது.
நாட்டில் அமைப்பை மாற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தை நடத்தும் இளைஞர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். அதனை நான் ஏற்கிறேன். நாடு கடும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. இந்த நிலையில் நான் அதிபராக பொறுப்பேற்று இருக்கிறேன். நிதி நெருக்கடிகளை சமாளித்து நாட்டை முன்னேற்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார்.