இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே அருகே இருக்கும் ஒரு நாட்டில் தங்கியுள்ளதாக வெளியான தகவல் பொய் என்று சபாநாயகர் கூறியிருக்கிறார்.
இலங்கையில் கடும் நெருக்கடியான சூழல் உருவானது. அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் அதிரடியாக நுழைந்தனர். இதனால் அதிபர் கோட்டபாய ராஜபக்சே அங்கிருந்து தப்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், கடற்படை முகாம் தளத்தில் தங்கியுள்ளார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் இலங்கைக்கு அருகே இருக்கும் ஒரு நாட்டில் தங்கி உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தகவலை மறுத்த சபாநாயகர், அதிபர் இலங்கையை விட்டு வெளியேறிவிட்டார் என்ற தகவல் முற்றிலும் பொய் அவர் இலங்கையில் தான் உள்ளார் என்று கூறியி ருக்கிறார்.