Categories
உலக செய்திகள்

இலங்கையில் கடும் நெருக்கடி…. வெளிநாடுகளுக்கு செல்ல… பாஸ்போர்ட் சேவை மையத்தில் குவியும் இளைஞர்கள்….!!!

இலங்கையில் பல மக்கள் பிற நாடுகளில் வேலை செய்ய ஆர்வம் காட்டுவதால் பாஸ்போர்ட் சேவை மையத்தில் குவிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடும் நெருக்கடியான நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால், கொந்தளித்த மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பாஸ்போர்ட் சேவை மையத்தில் மக்கள் அதிகமாக குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அத்தியாவசிய பொருட்களை சாதாரண மக்களால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, பிற நாடுகளுக்கு சென்று வேலை செய்து பிழைக்கலாம் என்று கருதிய மக்கள் கூட்டம் கூட்டமாக பாஸ்போர்ட்டை புதுப்பிக்க படையெடுத்து வருகிறார்கள்.

இது குறித்த ஒரு நபர் தெரிவித்ததாவது, நாடு தற்போது இருக்கும் நிலையில் பணி வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஆனால், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து இருக்கிறது. எனவே, சவுதி அரேபியா செல்வதற்கு கடவுச்சீட்டை புதுப்பிக்க வந்திருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |