Categories
உலக செய்திகள்

இலங்கைப்பெண் செய்த சித்ரவதைகள்.. பணிப்பெண் கூறியதை கேட்டு கலங்கிய நீதிபதிகள்.. சரியான தீர்ப்பு..!!

ஆஸ்திரேலியாவில், பணிப்பெண்ணாக அழைத்து செல்லப்பட்ட தமிழ் பெண்ணை, இலங்கை தம்பதி சித்ரவதை செய்ததால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய நாட்டில் Glen Waverley என்ற பகுதியில் இருக்கும் ஒரு குடியிருப்பின் கழிவறையிலிருந்து தமிழகத்தை சேர்ந்த 67 வயதுடைய பெண் பரிதாபமான நிலையில் மருத்துவ உதவி குழுவினரால் மீட்கப்பட்டார். அதன் பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கூறிய தகவல்களை கேட்ட மருத்துவ பணியாளர்கள் அதிர்ந்து போனார்கள்.

அதாவது, இலங்கையை சேர்ந்த தம்பதியான, கந்தசாமி கண்ணன்-குமுதினியின் வீட்டில் கடந்த 2007 ஆம் வருடத்தில் 2015ஆம் வருடம் வரை எட்டு வருடங்களாக கொடுமைப்படுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவலை கூறினார். மேலும் அந்த பெண் 40 கிலோ எடை தான் இருந்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் 3.39 டாலரை மட்டுமே சம்பளமாக கொடுத்திருக்கிறார்கள்.

மேலும் அந்தப் பெண்ணை, அவர்கள் அடித்து உதைத்துள்ளனர். அவர் அனுபவித்த சித்ரவதைகளை கேட்ட நீதிபதிகளே கண் கலங்கினார்கள். அவர் நீதிமன்றத்தில் கூறியதாவது, தன்னை அடித்து உதைத்தது, மட்டுமின்றி என் காலில் குமுதினி கொதிக்கும் நீரை ஊற்றி சித்ரவதை செய்தார்.

மேலும், என் முகத்தில் கொதிக்கும் தேநீரை ஊற்றினார். அதிகாலை 5:30 மணியிலிருந்து அடுத்தநாள், அதிகாலை 3 மணி வரை தொடர்ந்து கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைப்பார்கள். ஒரு மணி நேரம் தான் அதிகபட்சம் தூங்கவிட்டதாகவும் கூறியுள்ளார். எனினும் குமுதினி நாங்கள், அவரை மிகவும் மரியாதையாக நன்றாக நடத்தினோம்.

அவர் கூறுவது அனைத்தும் பொய் என்று தெரிவித்தார். ஆனால் குமுதினி கூறிய அனைத்தும் பொய் என்பதற்கு அந்த பெண்ணின் உடல் முழுக்க இருந்த காயங்களே சாட்சி. பலகட்ட விவாதங்களுக்கு பின்பு நீதிபதி தீர்ப்பு அளித்திருக்கிறார். அதில், இந்த வழக்கின், முக்கிய குற்றவாளி குமுதினிக்கு எட்டு வருடங்கள் ஆயுள் தண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்தார்.

மேலும் நான்கு வருடங்களுக்கு அவரால் ஜாமீனில் வெளிவர முடியாது. அந்த பெண்ணிற்கு ஏற்பட்ட சித்திரவதைகளை தடுத்து நிறுத்தாமல், வேடிக்கை பார்த்த குற்றத்திற்காக, கந்தசாமி கண்ணனுக்கு ஆறு வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். அவரால் மூன்று வருடங்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாதபடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |