இலங்கையில் சமிகா கருணாரத்னே என்னும் கிரிக்கெட் வீரர் பெட்ரோலுக்காக இரண்டு நாட்களாக மிக நீளமான வரிசையில் காத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
இலங்கை கடும் நிதி நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருப்பதால், அங்கு எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்திருக்கிறது. மக்கள் ஒவ்வொரு நாளும், பல சிக்கல்களை பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் இலங்கையின் கிரிக்கெட் வீரரான சமிகா கருணாரத்னே, எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறியதாவது, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கிரிக்கெட் பயிற்சிக்கு என்னால் சல்ல முடியவில்லை. பெட்ரோல் பங்கில் இரண்டு நாட்களாக மிக நீளமான வரிசையில் காத்திருந்தேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு பெட்ரோல் கிடைத்தது. கொழும்பு நகருக்கும் மற்ற பகுதிகளுக்கும் பயிற்சிக்காக செல்வேன்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, என்னால் அங்கு செல்ல முடியாமல் போனது. இரண்டு நாட்கள் கழித்து 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து பெட்ரோல் பெற்றிருக்கிறேன். இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு இந்த பெட்ரோல் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.