கொழும்பு நகருக்கு அருகில் 20 நாட்களுக்கும் மேலாக கச்சா எண்ணெய் கப்பல் காத்திருக்கும் நிலையில் 57 கோடி ரூபாய் இல்லாமல் இலங்கை அதனை வாங்க முடியாமல் இருக்கிறது.
இலங்கை இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. எனவே, அங்கு கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருகிறது. இந்நிலையில் 99 ஆயிரம் டன் எடை கொண்ட கச்சா எண்ணெயுடன் கப்பல் ஒன்று கடந்த 20ஆம் தேதி அன்று இலங்கை கடல் எல்லைக்கு சென்றது.
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் சுமார் மூன்று வாரங்களாக அந்த கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த கச்சா எண்ணையை வாங்க 57 கோடி ரூபாய் தேவை. இலங்கை அரசிடம் நிதி இல்லாத காரணத்தால் அதனை வாங்க முடியாமல் இருக்கிறது. எனவே, மூன்று வார காலமாக அந்த கப்பல் அங்கே நிற்பதால் தாமத கட்டணமாக ஒவ்வொரு நாளும் ஒன்றரை லட்சம் டாலர் வழங்கப்படுகிறது.