இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, சீன நாட்டுடன் கடன் மறுசீரமைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாக கூறியிருக்கிறார்.
இலங்கை வரலாறு காணாத வகையில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. எனவே, சீன போன்ற பல நாடுகளிடம் 47, 486 கோடி ரூபாயை கடனாக பெற்றது. அதனை திரும்ப செலுத்த முடியாமலும், அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கு அன்னிய செலவாணி கையிருப்பு இல்லாமலும் தவித்துக் கொண்டிருக்கிறது.
எனவே சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் உதவி கேட்டது. பல தடவை மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து 24,000 கோடி கடன் அளிக்க சர்வதேச நாணய நிதியம் சம்மதித்தது. இந்நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாவது, சீன நாட்டுடன் கடன் மறுசீரமைப்பு குறித்த பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகியிருக்கிறது.
அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு வரும் பதினாறாம் தேதி நடைபெறுகிறது. அதற்கு பின் பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெறும் என்று கூறியிருக்கிறார். மேலும் பொருளாதார பிரச்சனையை தீர்க்க, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ள விரைவாக டெல்லிக்கு செல்லவிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.