நடிகர் ஸ்ரீகாந்த் மறைவிற்கு ரஜினிகாந்த் சமூக வலைதளபக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் ”வெண்ணிற ஆடை” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும், சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் உடன் வில்லனாகவும் நடித்து பிரபலமானார்.
இவர் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 83. இவரின் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்களும் அவர்களின் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் ஸ்ரீகாந்தின் மறைவிற்கு தனது சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர், ”என்னுடைய அருமை தோழன் ஸ்ரீகாந்த் அவர்களின் மறைவு எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது எனவும், அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்” எனவும் பதிவிட்டுள்ளார்.