Categories
அரசியல்

அடுத்தடுத்து வெற்றி படங்கள்… தோல்வியிலும் மனம் தளரா நாயகன்… தனதாக்கிய சிறந்த விருதுகள்…!!

பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் ரோஜா கூட்டம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ் திரையுலகில் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீகாந்த் 1979 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் நாள் பிறந்தார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்துவருகிறார். இவரின் முதல் திரைப்படமான ரோஜா கூட்டம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப்படமாக அமைந்து இவருக்கு பாராட்டுகளை பெற்று தந்துள்ளது.

இதனையடுத்து நடிகை சினேகாவுடன் இவர் நடித்த ஏப்ரல் மாதத்தில் என்ற திரைப்படம் திரையுலகில் இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இதனை தொடர்ந்து கரு.பழனியப்பன் இயக்கத்தில் இவர் நடித்த பார்த்திபன் கனவு என்ற திரைப்படம் வெற்றியடைந்து இவருக்கு தமிழ்நாடு திரைப்பட சிறப்பு விருது கிடைப்பதற்கு காரணமாக அமைந்ததுள்ளது.

ஆனால் அதன்பிறகு இவர் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்ததால் சிலகாலம் வாய்ப்புகள் இல்லாமல் தவித்த ஸ்ரீகாந்துக்கு தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்து கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான ஆடவாரி மாடலாகு அர்த்தளு வெருலே என்ற தெலுங்கு படம் மிகப் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இவர் தெலுங்கு திரையுலகில் ஸ்ரீராம் என்று அழைக்கப்படுகிறார்.

மேலும் ஸ்ரீகாந்த் நடிகர் விஜயுடன் இணைந்து இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான நண்பன் என்ற படத்தில் நடித்து தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி உள்ளார். இவ்வாறாக ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, மெர்க்குரிப் பூக்கள் கனாக்கண்டேன், நண்பன் போன்ற தமிழ் படங்களிலும், போலீஸ் போலீஸ், நிப்பு, ஹீரோ, உப்புகண்டம் பிரதர்ஸ் பேக் இன் ஆக்சன் போன்ற தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் சிறப்பாக நடித்து திரையுலகில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறி தனக்கென தனியிடம் பிடித்திருக்கிறார்.

Categories

Tech |