இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சவை குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் பிரதமர் நரேந்திர மோடியும் வரவேற்றனர்.
இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற கோத்தபய ராஜபக்சவை இந்தியாவிற்கு வரச்சொல்லி, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அழைப்பையேற்ற அவர், இந்தியாவுக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக நேற்று இந்தியா வந்தடைந்தார். நாட்டின் தலைநகர் டெல்லியில் வந்திறங்கிய அவரை, மத்திய இணையமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார். கோத்தபயவுடன் இலங்கை வெளியுறவுத் துறை செயலர் ரவிநாதா ஆர்யசின்ஹ, கருவூலச் செயலர் என்.ஆர். அட்டிகாலே உள்ளிட்ட உயர் மட்ட அலுவலர்கள் குழுவும் வந்தது.

இந்நிலையில், டெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு வரவேற்பளித்தனர்.
இதையடுத்து அவர், ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். கோத்தபய நாளை சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்புவார் என்று அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.
Thank you for your warm welcome India 🇮🇳 pic.twitter.com/SyVzdUIyal
— Gotabaya Rajapaksa (@GotabayaR) November 28, 2019
Happy to receive @GotabayaR on his first overseas visit as the President of Sri Lanka.
His visit is a testimony to the time-tested ties between India and Sri Lanka and will help strengthen our bonds as well as energise our partnership. pic.twitter.com/siMQzFpuDk
— Narendra Modi (@narendramodi) November 29, 2019