இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே ராஜினாமா செய்ய நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருப்பதால் அவர் அது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் நடத்தும் போராட்டங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஊரடங்கு நடைமுறையில் இருந்தும், மக்கள் போராட்டத்தை நிறுத்தவில்லை. எனவே அதிக நெருக்கடி காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்சே தன் பதவியை ராஜினாமா செய்தார்.
எனவே, அவரின் ஆதரவாளர்கள், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் அதிபர் கோத்தபாய ராஜபக்சே, ராஜினாமா செய்ய அழுத்தம் அதிகரித்து வருகிறது. இதனால் பதவி விலகுவது தொடர்பில் அவர் ஆலோசனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.