இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஆளும் கட்சி தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு விலைவாசி அதிகரித்ததால் மக்கள் தவித்து வருகிறார்கள். பால் போன்ற அத்யாவசிய பொருட்களின் விலை இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடுமையாக அதிகரித்திருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
எனவே அதிபர் ராஜபக்சே ராஜினாமா செய்ய வேண்டுமென்று எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஆளும்கட்சி தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கேபினெட் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நமல் ராஜபக்சே, சசிந்திர ராஜபக்சே, சமல் ராஜபக்சே போன்றோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.